இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை பாவிக்கும் போது. . . .
வித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....
கவிதை அருமை.அருகாமையில் வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல இருக்கிறது கவிதை . தொடருங்கள்
ReplyDeleteநண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !
ReplyDeleteநன்றி மதுரை சரவணன்,
ReplyDeleteநன்றி பனித்துளி சங்கர்.
தங்கள் சொன்னது போலவே setting செய்துவிட்டேன். உதவியமைக்கு நன்றி.