மாலை வேளையில்
காதலை சொன்னது
வாய்ப்பாய்ப் போனது.
எப்படி?
கொடுமையான
முழக்கம் கேட்டு
பயத்துடன்
என் மார்புக்குள்
முகம் புதைத்தாய்.
எதிர் பார்க்காத
அந்தக் கொலை
இனிமையானது!
இதயம்
இயலாமல் போக,
வார்த்தை தேடிய உதடுகளும்
தோற்றுப் போனது.
எனது அணைப்பும்
உன்னை ஏதோ செய்ய ,
வெப்பம் உணர்ந்த உன்னை
நனைத்தது நம் கண்ணீர்.
ஒரு காதல்
ஏற்றுக்கொள்ளப்பட்ட
அற்புத வினாடிகளின் சாட்சியாக -
நீ,
நான் மற்றும்
காதலைத்தவிர
அங்கு யாரும் இல்லை!
.
.
.
Comments
Post a Comment