Skip to main content

அதிசயங்களின் அல்லிராணி



நீ நாணங்கொள்வதைச்
சொல்லி விடுகின்றன
மெல்ல விரியும்
உன் ஓர்கிட் கண்கள்.

பல விதங்களில் பூக்கள் 
உன் கூந்தலில்...
முன்பை விட
அழகு என்னவோ
பூக்களுக்குத்தான்.

நீ பாரதியின் புதுமைப் பெண்.
இருந்தும்,
அவைகளைத் தீண்டுவதில்லை
எனப்புலம்புகின்றன
ஊனமுற்ற பட்டாம் பூச்சிகள்.

வாக்குப் போட்டு
அதிசயங்களைத் தெரிகிறார்கள்.
உன் புன்னகையிலேயே
அதிசயங்கள் மொத்தமும்
அடங்கி விடும்
என்பேன் நான்.

அம்மா ராசிபலன்
பார்ப்பாள்.
நான் பார்ப்பதில்லை.
நற்பலனாய் நீயிருக்க,
அது எதற்கு?

என் ஒரு கோடி
ஞாபகத்துணிக்களும் நிரம்பிற்று.
இன்னும் உன் நினைவுகளைச்
சேர்க்க வேண்டும்.
உத்தி ஒன்றை
உபயம் செய்யேன்.
என் காதலியே?
.
.
.

Comments

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

தேநீர் வேளை

உனக்கும் எனக்குமிடையிலான தேநீர் வேளைகளை நான் அதிகம் நேசிக்கின்றேன்... காதற்ற தேநீர்க் குவளையை நீ நீட்டும் போது உன் கைவிரல்கள் தொடாமல்தான் வாங்கப் பார்க்கின்றேன். மீறியும் பட்டால் முறைக்காதே. என் தவறு ஏதுமில்லை. இரும்பைக் கவர்வது காந்தத்தின் இயல்புதானே.... நீ தரும் தேநீர் உள் நாக்கில் தித்திக்கும். உன் கூந்தல் வாசம் என் உயிரோடு கலக்கும். நம் இயல்பான பேச்சுக்களின் இடையே உன் கண்கள்  என் கண்களை வேறு உலகத்திற்கு இட்டுச்செல்வதை தடுக்க முடியாமல் தடுமாறி, நொருங்கி உன் தேநீர்க் குவளைக்குள் விழும் என்னை சட்டென எடுத்துக் குடிப்பாய். நீ விரும்பித்தான் குடித்தாயா என்பதை உன் கடைவாயில் ஒட்டியிருக்கும் காதல்தான் சொல்ல வேண்டும்! . .