Skip to main content

Posts

திமிரன்

  ஒருவன் திமிருடன் இருந்தால் அவனிடம் ஏராள பணம் இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அவன் அதிகாரத்தில் இருக்கின்றான் என்றும் அர்த்தமல்ல. மாறாக, மற்ற ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகையில் தான் குடிப்பதே இல்லை என்கின்ற திமிராக இருக்கலாம். ஒருபோதும் மற்றைய வர்களின் மனது புண்படும் படி பேசியதில்லை என்கின்ற தெனாவெட்டாக இருக்கலாம். ஒருபோதும் பிறரின் பொருட்களுக்கோ சொத்துக்களுக்கோ ஆசைப்படுவதில்லை என்கிற மிடுக்காக இருக்கலாம். பலரைப்போல தவறான வழியில் பணமோ பொருளோ ஈட்டுவதில்லை என்கிற கர்வமாக இருக்கலாம். யாரையும் ஏமாற்றிப் பிழைப்பதில்லை, யாரையும் அண்டிக் கொடுத்து, கோள் மூட்டி விட்டு அதில் சுகம் காணும் நயவஞ்சக குணம் தன்னிடம் இல்லை, வலக்கைக்கு தெரியாமல் இடக்கையால் இல்லாதோருக்கு உதவிகள் செய்பவன் என்கிற பெருமையாக இருக்கலாம். கோடியில் ஒருவனே அவ்வாறு இருப்பான்.  மதுசூதனன் அத்தகைய ஒருவன்.  திமிரன்!  எழுதிக்கொண்டிருக்கும் திமிரன் சிறுகதையில் இருந்து ஒரு பகுதி... எழுதிக் கொண்டிருந்த வேகத்தை நிறுத்தி நிதானமாக ஒருதடவை யோசித்த கமலக்கண்ணன், "இந்தக்காலத்தில இப்பிடி எழுதினால...

அதிஷ்டம் -சிறுகதை

      திருக்கைலாயத்திலே இரவு நாடகங்களை முடித்துக் கொண்டு 52 இன்ச் டிவியை அனைத்துவிட்டு படுக்கைக்கு வந்த பார்வதி மிகவும் ஜோசனையில் இருந்த சிவனை பார்த்து "சுவாமி! என்ன பலத்த ஜோசனையில் இருக்கிறீர்களே என்ன விஷயம்" என கேட்டார். "அதொன்றும் இல்லை பாரும்மா, இவன் என்னுடைய அதீத பக்தன் சிவதாசன் இருக்கின்றானே அவன் மகாஜன சம்பத ஒன்றை வாங்கினான். சரி அவனும் கொஞ்சம் பொருளாதார ரீதியில் கஷ்டத்தில் இருக்கின்றான் தானே, அதனாலே அவனுக்கு சூப்பர் பரிசு 5 கோடி பணப்பரிசு விழும்படி செய்தேன். சந்தோசத்தில் துள்ளிக் குதித்த அவன், இரவு படத் தட்டிலிலே அவ் டிக்கட்டை வைத்து, கற்பூரம் ஏற்றி கும்பிட்டு விட்டு படுக்கச் சென்றான். காலை எழுந்து பார்த்த போது டிக்கட் தீப் பிடித்து முழுதுமாக எரிந்து விட்டிருந்தது. அதைப் பார்த்து அதிர்ந்து போன அவன் என்னை படு மோசமாக திட்டித் தீர்த்து விட்டான். அது தான் மனதுக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கின்றது" என்றார். அதற்கு பார்வதி" ஏன் நீங்கள் அந்த டிக்கட் எரிவதை தடுக்கவில்லை பிரபு ?" எனக் கேட்டார். நீண்ட பெருமூச்சொன்றை விட்ட படி சிவன் சொன்னார்" இவனுக்கு 5 கோடி...

தமில் விறுது - சிறு கதை

இன்று ஆகஸ்ட் 10, 2030.  வறுடம் தோறும் நடைபெறும் அகில உலக தமில் மொலி தினப் போட்டிக்கான விலாமேடை சிறப்பாக கண்கவர் நியோன் விலக்குகலால் அலங்கறிக்கப்பட்டு, கண்ணுக்கு மையிட்ட அலகான பெண் தொகுப்பாலினி, சிறப்பாக தொகுத்து வலங்கிக் கொண்டிறுந்தால்.  அடுத்ததாக நான் ஆவலுடன் எதிர் பாத்திறுந்த ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளறை அறிவிக்கும் நேறம் வந்தது. காரணம் இவ்வாண்டுக்கான சிறந்த எலுத்தாலர்கலாக தமில் நேசன், ஆகாயத்தாமறை, இலமாறன் மற்றும் நான் தெறிவாகியிறுந்தோம்.  தொகுப்பாலினி தன் இனிய குறலில் "  நாம் வறுடா வறுடம் தமிலை எலுத்துப் பிலையில்லாமல் எலுதக்கூடியவர்கலுக்கு வலங்கிவறும் ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர் விறுதை,  இம்முறையும் தமில் நேசனுக்கு வலங்குவதில் நாம் பெறு மகில்ச்சி அடைகின்றோம்". என் விறுது கனவு இம்முறையும் கலைந்து, நெஞ்சுக்குல் சுறுக் என்று பிசுங்கான் குத்தியது!  * * * * * #சிறுகதை #தமில்விறுது

முடிவல்ல,மீண்டும் ஆரம்பம்!

அனைவருக்கும் எனதன்பார்ந்த வணக்கம்! இறுதியாக இவ் blog இல் எழுதியது 2012 ல், இப்போது 2019. சரியாக 7 வருட இடைவெளி.  இந்த 7 வருடங்களும் வாழ்க்கையின் மிகச்சிறந்த படிப்பினை தந்த 7 வருடங்கள். இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் முன்னேற்றம் தான்.  இந்த 7 வருடங்களில் உலகமே நிறையவே முன்னேறி விட்டிருக்கின்றது,  குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு வலையமைப்பில். கைத்தொலைபேசி பாரிய வளர்ச்சி கண்டுவிட்டது. 2012 ல் ஒரு Pc செய்த மாயாஜாலங்களை விடவும் அதிகமாக 2019 ல் சிறு கைத்தொலைபேசி செய்கின்றது.  சமூக வலைத்தளங்கள் வேறு கட்டத்தை அடைந்துவிட்டன. ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றக்கூட கூடிய சக்தியாக அவை மாறி விட்டிருக்கின்றன. இலட்சக்கணக்கான இலவச செயலிகள் எங்கும் இறைந்து கிடக்கின்றன. இது செயலிகள் சூழ் உலகு. செயலிகள் இன்றி எதுவும் அசையாது. பிட்காயின் (Bitcoin) 2012 ல் ஒன்று 13 US$ விற்றது, 2017 ல் ஒன்று 20000 US$ ற்கு சென்றது. இன்றைய தேதியில்  ஒரு Bitcoin 10000 US$ ற்கு விற்பனையாகின்றது.  போதையில், சுய சிந்தனை இன்றி, தள்ளாடியபடி 2012 ல் Bitcoin வாங்க...

கேடுகெட்டவர்களின் காதல்!

அவன் பார்த்தான். அவள் சிரித்தாள். அப்போது பிறந்ததை காதல் என்றுதான் அர்த்தப்படுத்திக் கொண்டனர் இருவரும்! கடற்கரையில் ஒன்றாக கால் நனைத்தார்கள். வகுப்பறையில் தனியாக முத்தமிட்டுக் கொண்டார்கள். பூங்காவில் மெய்மறந்து அணைத்துக் கொண்டார்கள். இரவுப் பேரூந்தின் இறுதி இருக்கையில் ஒருநாள் எல்லை மீறினான் அவன். ஓர் ஆணின் வித்தைகளை எண்ணி  வியந்தாள் அவள். ஓர் பெண்ணின் மென்மைகளை எண்ணி பித்துப்பிடித்தான் அவன். அவளோ தவித்தாள்! தடுக்கவும் மனமில்லாமல், அனுமதிக்கவும் முடியாமல் அவள் தவித்தாள், உச்சத்தை அடைவதற்காகத் துடித்தாள். அவனோ வேண்டுமென்றே  மிச்சம் வைத்தான்! அப்போது  அவர்கள் இருக்கை முழுவதும்  நிறைந்து வழிந்துகொண்டிருந்தது காமம்! மறுநாள், உபத்திரவமற்ற  ஹோட்டல் அறையில், காதலின் பெயரால்  அவள் ஆடை களைந்தாள்- உலகத்தின் சார்பாக ஒளித்துவைக்கப்பட்ட அவனது கைபேசியின் கமெராக் கண்கள் அதைப் பதிவுசெய்வதை அறியாமல்! உச்சமடைந்து, உடல்கள் களைத்து, கறைகள் களைந்து, ஆடை அணிந்து அறையை விட்டு வெளியேறினர். கற்பழிக்கப்பட்ட காதல் மட்டும் அவர்க...

வெட்கத்துண்டை வீசியவள்!

எப்போது பார்த்தாலும்,  படித்தாலும் மனசை கொள்ளை கொள்ளும் தபூ சங்கரின்  காதல் கவிதைகள் நீ! வெனிஸ்வேலா நாட்டுக்காரியை உலக அழகியாகத் தெரிந்தார்கள் - உன்னைப் பார்க்காத முட்டாள்கள்! உன் விரலைப் பிரிந்த  நகத்துண்டு, உன்னை விட்டு உதிர்ந்த  தலை முடி, உன்னை விட்டுத் தவறிய  கைக்குட்டை என எதுவுமே என்னிடம் இல்லை! உன்னை  வேண்டாமென்று வெறுத்தவை  எனக்கெதற்கு? உனக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடுவேனோ  என்ற பயத்தில், நான் ஆசையாக எழுதிக்காட்டும் கவிதைகளில் - நீ ஆர்வம் காட்டமாட்டாய். உடனே  எனக்குள் நினைத்துக் கொள்வேன் - சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று பொறாமைப் படுகிறதே என்று! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரன் நான். சமயங்களில் மாறிவிடுகிறேன்... வர்ணக்குடுவை சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சியாய், உன் உதட்டுச் செம்பில் நிறைந்து வழியும்  புன்னகைப் பாலாய், உன் கண்களின் படபடப்புக்குள் சிக்கிக் கொண்ட  வெட்கத் துண்டாய், மஞ்சள் பூக்களாய், மலை நாட்டுச்  சுடாத வெய்யிலாய், நதிகளை நனைக்கும் சில்லென்ற மழைய...

வெட்கக்கேடு!

* ** *** ** * கால்கள் செயலற்றுப்போன  இளைஞன் ஒருவன் தன்நம்பிக்கையுடன், சாலையில்  பழங்கள்  விற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்... தகுந்த வேலைக்காக தலைக்கனத்துடன் காத்திருக்கும் சில வேலையற்ற பட்டதாரிகள் சார்பாக வெட்கித்தலை குனிந்தேன்! . . .

தாழ்வு மனப்பான்மை!

> >> > உளவியல் கணிப்புப்படி தாழ்வு மனப்பான்மையின்  தாய் - உடலமைப்பு! தந்தையோ - நிறக்குறைவு! தாழ்வு மனப்பான்மையை  விட்டொழி, வெற்றி பெறுவாய் என்று போதிப்பது  சுய முன்னேற்றப் புத்தகங்களின்  விற்பனைத் தந்திரம்! கல்லா கட்டியதும் தங்கள் கடையை மூடி விடுவார்கள்! பாதிக்கப்பட்டவனோ  பாதியிலே விடப்படுவான்! உண்மையில் உடல் அமைப்பும் நிறக் குறைவும் ஒருபோதும் நோயாகாது! தோற்றத்தைப் பார்த்து  எடைபோடுபவர்களை வேண்டுமானால் மன நோயாளிகளாக வைத்துக் கொள்ளலாம். அவர்கள் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்லலாம். என்னைப் பொறுத்தவரை, தாழ்வு மனப்பான்மை என்பது கேடயம்! பந்தாக் காரர்களும், பணக்காரர்களும்  பவிசுக் காரர்களும், பதவிக்காரர்களும்  குணமற்றவர்களும்,  நல்ல மனமற்றவர்களும்  வடிகட்டப்பட்டு, நல்லவர்கள் மட்டுமே நட்பாய் கிடைக்கும்! நல்ல நட்பு என்பது  மிகப் பெரும் வரம்! தலைக்கனத்தோடு இருப்பதைவிட, தாழ்வு மனப்பான்மையுடன்  இருப்பதொன்றும் குற்றமெல்ல! காரணம் -...

உளவியல் உண்மை

அப்பா இன்றி வளர்பவர்கள் சமூகத்தில்  தன்நம்பிக்கை இன்றி  வளர்கிறார்கள்... அம்மா இன்றி வளர்பவர்கள் சமூகத்தில் நல்ல பெண்களை சட்டெனக் காதலிக்கிறார்கள்... அப்பாவும், அம்மாவும் இன்றி வளர்ந்தவர்கள் சமூகமே வேண்டாமென்று தனிமையுடன்  ஒதுங்கியே வாழ்கிறார்கள்! . .

அதன் பெயர் இருட்டு!

அது ஒரு கனத்த பறவை. அலகுகள் நீண்ட,  இறக்கைகள்பெருத்த  தந்திரப் பறவை. அழகான எதுவுமற்ற,  பாடவும் தெரியாத குரூரமாகக் கொலைசெய்யும் கொடிய பறவை.  கடும் பசியுடன் வெகு நேரம் காத்திருந்து, இயற்கை ஆடைமாற்றச் சென்ற ஒரு ஆரவாரமற்ற கணத்தில், சூரியனை  கூரான அலகால் கொத்திச் சென்று உயரமான மரத்தின் மேலிருந்த தன் கூட்டுக்குள் ஒளித்துக்கொண்டது..... எப்போதோ கொத்தித் தின்ற சுவையற்ற நிலவின் மிச்சத்தை வானம் நோக்கித் துப்பியது! அநேகமாக, வேறொரு கூட்டிலிருந்து பதப்படுத்தி வைக்கப்பட்ட இன்னுமொரு சூரியன் நாளை காலை  நன்றாக விடிவதற்குள் நழுவி விழக்கூடும்! விழாவிட்டால், எப்போதோ களவாடிவைத்த மற்றுமொரு சூரியனை அமெரிக்கா மீண்டும்  வானுக்கே அனுப்பும் அல்லது வியாழனை அணுகுண்டால் எரிக்கும். எனவே கவலையில்லை! . .

மைக்ரோ கவிதைகள்

கவிதை - 01 : கடற்கரை விளிம்புகளில் அணைத்துக் கொள்ளும் குடை நிழல்களிலும், பூங்காவில் வண்ணத்திப் பூச்சிகளால் பரிமாறப்படும் முத்தங்களிலும், இளவேனிற் காலத்தில் காமத்தைச் சீண்டியபடி கை கோர்த்துச் செல்லும் கணவன் மனைவியிலும், விரைவில் முடியாத ஒற்றையடிப் பாதைகளிலும், திரையரங்கின் ஒளியற்ற பின்னிருக்கைகளிலும், வகுப்பறையின் கிசு கிசுக்கள் நிறைந்த வெண் சுவர்களிலும்.... தன்னை  இலவசமாக விளம்பரப்படுத்த  முயற்சிக்கின்றது காதல்! * * * * * கவிதை - 02 : எந்தப் புல்லாங்குழலும் இசையைத் தனக்குள் ஒளித்து வைத்திருப்பதில்லை. உன் உதடுகள் எந்த முயற்சியும் எடுக்காதவரை... அவை வெறும்  மூங்கில் துண்டுகள் தான்! * * * * * கவிதை - 03 : என்னுடைய  எந்தக் கவிதையை விடவும் மிகவும் சிறப்பானது எதுவும் எழுதப்படாத ஒரு வெற்றுத்தாள். . .

சின்னச் சின்னக் கவிதைகள்

தொட்டதும் அதிர்கிறேன். மின்னாலும், உன்னாலும்! * கூந்தலைப் பரப்பிவிட்டாய். மிரண்டுபோய் ஒளிந்துகொண்டது இரவு. * தேன் தொட்ட பலாச்சுளைகள் - உன் மேலுதடும், கீழுதடும். * நீ என்னை  அலங்கரிக்கின்றாய்... ஞாபகத்தில் வந்து நின்றது நேர்ந்துவிட்ட ஆடு. * இக்கணமே செத்துப்போவோமா என்கிறாய்... வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே நம் உடல்கள்! * எந்தப்பூக்களும்  தங்களைத் தாங்களே பிய்த்துக் கொள்வதில்லை. காதலில் மட்டும்தான் அப்படிச் செய்வதற்கும் அனுமதியட்டை கிடைக்கின்றது! . .

நிராகரிக்கப்பட்டவனின் உணவுத்தட்டு

உனக்கு என்னிடம் பிடித்ததே எதற்கும் இணங்கும் இந்த மௌனம் தான் என்று தெரிந்ததும் விழுந்து உடைந்தன - உனக்காக சேர்த்து வைத்திருந்த யேர்மன் தேசத்து வார்த்தைக் கண்ணாடிகள்! நான் கவிதைகளின் காதலன். நீயோ கடனட்டைகளின் சேமிப்பகம்! உனக்கு கவிதை பிடிக்காது என்பதற்காக நான் குற்றவாளி என்று அர்த்தமில்லை! நிராகரிக்கப்பட்டவனின் உணவுத்தட்டிலிருந்து இத்தாலிய உணவுகளை எதிர்பார்க்கும் பெண்ணே! எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால் எட்டியா உதைவாய்? சரி, உன்னை என் குழந்தையாக ஏற்றுக்கொள்கிறேன். காறித் துப்புகிறாயே! பரவாயில்லை, உன்னை கடலலையாக நினைத்துக் கொள்கிறேன். ஒரு கணம் நின்று கேள்! நிராகரிக்கப்பட்டவனின் உணவுத்தட்டென்பது எதிர்பார்ப்புக்களால் மலம் களிக்கப்பட்ட ஏமாற்றத்தைத் தவிர வேறெதுவுமல்ல! . .

வாழ்க்கை எனும் சூத்திரம்

மக்கு மனிதா! சொர்க்கம் என்று நிச்சயமாக எதுவுமில்லை. அது இங்கே தான் இருக்கிறது.... சிலருக்கு போதையின் வடிவில் ( மண் போதை, மது போதை, பண போதை, பதவி போதை, பெண் போதை, பொன் போதை  எல்லாமும் தான்......) சிலருக்கு காதலின் வடிவில், சிலருக்கு காரின் வடிவில், சிலருக்கு i-phone இன் வடிவில், சிலருக்கு android இன் வடிவில்.......... ஆசைப்பட்டதை அடைந்துவிட வேண்டும். எப்படி? நியாயமாக ஆசைப்பட்டு, நேர்மையாக அடைந்துவிட வேண்டும். வாழ்க்கை எனும் சூத்திரத்தில் குழம்பிக்கொள்ள எதுவுமில்லை. அதை இலகுவாக்க ஒரே வழி - தலைகீழாக வைத்துப்படிக்கும் சூத்திரத்தை நேராக வைத்துப்படியுங்கள் அவ்வளவே! நாளைக்கு உண்பதற்காக இன்றைக்குப் பட்டினி கிடப்பதில் அர்த்தம் இல்லை. இளமையை சேமிக்கப் பயன்படுத்திவிட்டு, முதுமையில் எதையும் செலவழிக்கப் போவது கிடையாது! கால இயந்திரம்  கண்டுபிடிக்கப்படும் வரை இறந்த காலத்தை மீண்டும் வாழ்வது இப்போதைக்கு சாத்தியமில்லை. மறந்துவிடாதீர்கள்! இன்பமுற வாழுங்கள்.... பால் போல நுரைக்க நுரைக்க, மூங்கில் போல தழைக்கத் தழைக்க! . .

prof. Stephen Hawking என்னும் வாழும் அதிசயம்!

ஜனவரி 8, prof. Stephen Hawking அவர்களது 70தாவது பிறந்த தினம், அவரை மனதார வாழ்த்திச் சிறப்பிக்கும் முகமாக பகிரப்படும் பதிவு இது. Happy Happy Birthday Dear Stephen Sir............ (:-D) அறிவியலில் ஆர்வமுள்ளவர்களிடம்,  “இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானி யார்?” என்று கேட்டால், தயங்காமல் சொல்வார்கள் ஸ்டீபன் ஹௌகிங் (pro. Stephen W. Hawking) என்று. இத்தனைக்கும் அவர் ஒன்றும், ஹொலிவூட் படங்களில் வரும் விஞ்ஞானிகளைப் போல விசில் அடித்தபடி, ஒற்றைக் கையால் கார் ஓட்டுபவரோ அல்லது தனது வசீகரிக்கும் பேச்சாலும் கவர்ந்திழுக்கும் கண்களாலும் பெண்களை தன் வலையில் விழ வைப்பவரோ அல்ல. அவரை முதன் முதலில் பார்க்கும் யாரையும் பரிதாபப்பட வைக்கக் கூடிய நிலையில் இருப்பவர். ஆம், உண்மையில் அவர் ஒரு நோயாளி!. அவர் ALS/MND எனப்படும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர். இங்கு ALS என்பது Amyotrophic Lateral Sclerosis இனையும், MND என்பது Motor Neurone Disease என்பதையும் குறிக்கின்றது. இந்த நரம்பியல் நோயால் வருடந்தோறும் உலகம் முழுவதும் 350,000 பேர் பாதிக்கப் படுவதாகவும், 100,000 பேர் இறந்துப...

மனதில் பட்டவை - 2

நாம் எல்லோரும் பைனாகுலர் பயன்படுத்தும் போட்டி ஒன்றில் பங்குபற்றிக்  கொண்டிருக்கிறோம். நம் எல்லோரிடமும் விலை கூடிய, அழகான பைனாகுலர் ஒன்று தரப்பட்டிருக்கின்றது. அதை புத்திசாலித் தனமாகப் பயன் படுத்தி வெற்றி பெறாமல், தேவையில்லாத அற்ப விடயங்களில் எல்லாம் நாம் அந்த பைனாகுலரை பெருப்பித்தும், கிட்டவாக்கியும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அநத் பைனாகுலரைத் திருப்பி, அதன் மற்றைய பக்கத்தால் பார்க்கும் போது, அது காட்டும் பொருள் சிறிதாகவும், தூரத்திலும் தெரிவதை பெரும் பாலும் மறந்து விடுகிறோம். அப்படி மறந்து விடுபவர்களில் பலர் இந்தப் போட்டியில் தோற்றும் விடுகிறார்கள்.  அந்த பைனாகுலரின் விஞ்ஞானப் பெயர்................வாழ்க்கை! * ஓடும் நீர் ஆவியாகி மேலெழுவதும், அந்த நீராவி மழையாகி நிலத்தில் பெய்து  மீண்டும் ஓடும் நீருடன் சேர்வதும், அதன் ஒரு கிளை தனியாகச் சென்று உறைந்து போய் பனிக்கட்டி ஆவதும் வாழ்க்கை வட்டத்தின் இயல்பு நிலைகள்.  என்ன இந்த நீர் நமக்கு அடங்காமல், கட்டுப்பாடுமில்லாமல் இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருக்கிறதே என்று ஆத்திரப்படுவதில் எந்த அர்த்தமும...

காதல் படிக்கட்டில்

(பாடலை சந்தத்துடன் படிக்கவும்...: ரானா ரனனானா, ரா ரனனன ரானானா... ) ஆண் குரலில் : காதல் படிக்கட்டில் நான் கடைசியில் நிற்கின்றேன். என்னைக் கடந்து செல்லும் பெண்பூவே! கவனிக்க மாட்டாயா? என் கண்களைப் பாரம்மா. இந்தக் கவிதையைக் கேளம்மா... காதல் என்றால் கொடுமையல்ல புரிந்து கொள்ளம்மா. வகுப்புக்கு நீ வருவாய். என்னை விட்டு  தூரத்தில் போய் அமர்வாய். இந்த இடைவெளி அளவு குறையாவிட்டால் கணிதமும் கசந்துவிடும். மலர்களை விரும்புகிறாய் அதை முள்ளுடன் பறிக்கின்றாய். முள் நான், மலர் நீ சேர்ந்தே இருக்கணும் விளங்கிக் கொள்வாயா? இந்தக் காதல் தவிக்கும்படி உன் கண்களும் பழிக்குதடி. நிலவொளி என்பது முற்றத்தில் விழுவது கால்கள் மிதிப்பதற்கா?. என் கூடவே வருகின்றாய். பேரூந்தின் பாடல்கள் இரசிக்கின்றாய். அதில் என் பெயர் கேட்டதும்  உன் முகம் சிவந்ததை  என்னிடம் மறைக்காதே! அடி வெல்வெட் துணித்துண்டே! என்னை வெறுப்பதாய் நடிக்காதே! உன் உதடுகள் சொல்வதும் இதயம் நினைப்பதும் நிச்சயம் ஒன்றல்ல. உன் கைவிரல் அணைப்பிற்குள் தங்க மோதிரம் துயில்கிறதே... அதில் உன் பெயர், ...

ஒரு தபுதாரனின் தவிப்பு

என்ன இந்த வாழ்க்கை  ஏன் இப்படிக்கொல்கிறதோ... காதலித்த மனைவியை  காலனிடம் இழந்தவர்களுக்கு  வெற்றுச் சுவரை விட வேறு மார்க்கமேயில்லையா? வேலை விட்டால் வீடு வீடு விட்டால் வேலை என்று சுருங்கிவிட்ட  வாழ்க்கை. நீ அதிகம் விரும்பிய மழையையோ, மலர்களையோ கடற்கரையையோ, காதல்பாடல்களையோ  அனுமதிக்காத வாழ்க்கை. வேலை நேரம் கழிந்து எஞ்சிய வாழ்க்கையை வீடு முழுக்க விரவியிருக்கும் உன் அடையாளங்களும் அவை கொண்ட  நினைவுகளும் தின்கின்றன! சனி, ஞாயிறு, விடுமுறை தினமோ இன்னும் மோசம் இன்னும் மோசம்! காலையில் தரையிலிருந்து என்னை எழுப்பிவிட்டு, குளிக்கும் போதும்,  குடிக்கும் போதும், சமைக்கும் போதும்,  சாப்பிடும் போதும், துவைக்கும் போதும்,  உலர்த்தும் போதும்,  படிக்கும் போதும்,  சுவரை வெறித்துப்பார்க்கும் போதும் கூடவே இருந்துவிட்டு... பிந்திய இரவில் தவறாமல் கண்ணீருடன் தூங்க வைக்கிறது தனிமை. நீ அடம்பிடித்து வாங்கிய கட்டில்,  ஆசையாய் மீட்டும் வயலின், நமக்குள் பரிமாறிக்கொண்ட பரிசுகள், மௌனத்தைப் பேசும்...