Skip to main content

கண்ணே கண்ணுறங்கு...




மானே மரகதமே 
நான் பெற்ற மரிக்கொழுந்தே 
உன்னைச் சுமந்த படி 
ஒவ்வொன்றாய் 
நான் சொல்வேன்...

ஊருக்குள்ள உங்கப்பா 
பெரியவீடு கட்டினாரு. 
ஊரே வாழ்த்தியது 
ஒசத்தியாத்தான் பேசியது.

நம் வீட்டு முத்தத்தில 
நட்சத்திரப் பூப்பூக்கும்
நிலவு தினம் வந்து 
நல் வாழ்த்துப் பாடிச் செல்லும்.

சந்தோசமாய் நாமிருந்தோம். 
சகலதும் பெற்றிருந்தோம். 
யாற்ற கண் பட்டிச்சுதோ 
நானறியேன் என் கண்ணே.

ஆடி மாசம் ஓரிரவு 
அப்பாவுக்கு நெஞ்சுவலி
ரொம்பத் துடிச்சாரு.
சிரிச்ச படியே போய்ட்டாரு.

உங்கப்பா போன பின்னே 
அப்புறந்தான் நீ பொறந்தே. 
செல்வக் களஞ்சியமே 
சீர் நிறைந்த பொக்கிசமே.

கடன் வாங்கிக் கட்டின வீட்ட 
கடன்காரன் எடுத்துக் கொள்ள 
நல்லா வாழ்ந்தவங்கன்னு 
ரெண்டு வரிதான் மிஞ்சியது.

ஐயோ பாவமுன்னு 
யார் யாரோ வந்தாங்க.
ஆம்பிளைங்க பேசினத 
என்னான்னு நான் சொல்வேன்?

நெல்லுக் கிறச்ச தண்ணி 
வீணாகப் போவதில்லை.
அம்மா வடிச்ச கண்ணீருக்கு 
அர்த்தம் தர நீயிருக்க.

சபிக்கப்பட்ட பூமியில 
பாவப் பட்ட ஜீவன் நாங்க.
எனக்குச் சொந்தம் எண்டு 
உன்னை விட்டா யாரிருக்கா?

நீ வளந்து இம்மண்ண 
ஆளவேணும் என் ராசா.
பால் குடிச்ச பைங்கிளியே 
இப்போ கொஞ்சம் நீ தூங்கு!
.
.
.


Comments

  1. தாலாட்டு சும்மா கடனுக்கு பாடவில்லை. அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்களுக்கு நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

தாழ்வு மனப்பான்மை!

> >> > உளவியல் கணிப்புப்படி தாழ்வு மனப்பான்மையின்  தாய் - உடலமைப்பு! தந்தையோ - நிறக்குறைவு! தாழ்வு மனப்பான்மையை  விட்டொழி, வெற்றி பெறுவாய் என்று போதிப்பது  சுய முன்னேற்றப் புத்தகங்களின்  விற்பனைத் தந்திரம்! கல்லா கட்டியதும் தங்கள் கடையை மூடி விடுவார்கள்! பாதிக்கப்பட்டவனோ  பாதியிலே விடப்படுவான்! உண்மையில் உடல் அமைப்பும் நிறக் குறைவும் ஒருபோதும் நோயாகாது! தோற்றத்தைப் பார்த்து  எடைபோடுபவர்களை வேண்டுமானால் மன நோயாளிகளாக வைத்துக் கொள்ளலாம். அவர்கள் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்லலாம். என்னைப் பொறுத்தவரை, தாழ்வு மனப்பான்மை என்பது கேடயம்! பந்தாக் காரர்களும், பணக்காரர்களும்  பவிசுக் காரர்களும், பதவிக்காரர்களும்  குணமற்றவர்களும்,  நல்ல மனமற்றவர்களும்  வடிகட்டப்பட்டு, நல்லவர்கள் மட்டுமே நட்பாய் கிடைக்கும்! நல்ல நட்பு என்பது  மிகப் பெரும் வரம்! தலைக்கனத்தோடு இருப்பதைவிட, தாழ்வு மனப்பான்மையுடன்  இருப்பதொன்றும் குற்றமெல்ல! காரணம் -...

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...