Skip to main content

பிரபஞ்சமும் காதலும்


பிற்பாடு சொல்.
எது பெரிது?
பிரபஞ்சமா? அல்லது
காதலா?

பெரு வெடிப்பு
நிகழ்ந்த போது
பிரபஞ்சம் பிறந்தது.
முதற் பெண்ணின்
வருகையால்
காதல்
கருத்தோன்றியது.

சிறுத்துப் பெருக்கிறது
பிரபஞ்சம்.
காதலின் கோயில்
இதயமும் அப்படித்தான்.
காதல் மட்டும்
அங்கே கர்ப்பக்கிரகம்.

பிரபஞ்சத்தின் முதற் பிள்ளை
பால்வீதி.
காதலின் கைக் குழந்தை
காமம்.

பிரபஞ்சத்தின் அலங்காரம்
விண்மீன்.
காதலின் அலங்காரம்
முத்தம்.

பிரமாண்டமானது
பிரபஞ்சம்.
பிற பஞ்சமற்றது
காதல்.

முடிவுள்ளது
பிரபஞ்சம்.
முடிவிலியானது
காதல்.

இப்போது சொல்
எது பெரிது?
.
.
.

Comments

  1. //முடிவுள்ளது
    பிரபஞ்சம்.//
    ???

    காதல் தான் பெரிதுன்னு சொல்றிங்க

    ReplyDelete
  2. காதலன் பார்வையில் பிரபஞ்சம் கூட முடிவுள்ளதாகத் தோன்றுகிறது.
    காதல் அவனை அப்படிப் பேச வைக்கிறது.....

    ReplyDelete

Post a Comment